வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் -அமைச்சர்

Update: 2023-12-18 02:20 GMT
நாகர்கோவில் ரயில் நிலைய பகுதியை அமைச்சர் ஆய்வு.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார்  ரயில்வே காலனி, வடிவீஸ்வரம் மீனாட்சி கார்டன் பகுதிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த் மோகன் முன்னிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், -   இரண்டு நாட்களாக தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகமானதால் அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் வெள்ள அபாயத்திலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்குமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. என்று கூறினார். ஆய்வின் போது நாகர்கோவில் ஆர்டிஓ வின் தனி உதவியாளர் சுப்பிரமணியம், தனி வட்டாட்சியர் கோலப்பன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசியா உட்பட பலர் இருந்தனர்.
Tags:    

Similar News