முடிவுறாத பனிப்போர் - பீலா வெங்கடேசன் கடும் வாதம்

மின் இணைப்பு துண்டிக்கபட்டதற்கு எதிராக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது.

Update: 2024-05-30 13:34 GMT

பீலா வெங்கடேசன்

 தையூர் பங்களா வீட்டின் மின் இணைப்பை துண்டிக்குமாறு பீலா வெங்கடேசன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் மின் இணைப்பு துண்டிக்கபட்டதை எதிர்த்து ராஜேஷ் தாஸ் வழக்கு தொடர்ந்தார்.

பீலா வெங்கடேசன் பெயரில் மின் இணைப்பு உள்ளதால் அதனை தற்காலிகமாக துண்டிக்குமாறு கோரிக்கை வைப்பதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது என்றும், ராஜேஷ் தாஸ்க்கு சொந்தமாக நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடும், பல இடங்களில் லாட்ஜ்கள் உள்ளதால் அவர் அங்கேயே தங்கி கொள்ளலாம் என்றும் பீலா தரப்பு தெரிவித்தது.

Tags:    

Similar News