`தந்தையாக இருந்து இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளேன்!’ - மு.க ஸ்டாலின்

Update: 2024-08-09 14:30 GMT

மு.க ஸ்டாலின்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கோவை அரசுக் கலைக் கல்லூரியில் நடந்த தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், "திராவிட மாடல் அரசு கடந்த மூன்றாண்டுகளில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. நாட்டுக்கே தமிழ்நாடு முன்மாதிரி என்று சொல்லும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

Advertisement

மகளிர் இலவச பேருந்து திட்டத்தை இதுவரை 518 கோடி முறை பெண்கள் பயன்படுத்தியுள்ளனர். காலை உணவுத் திட்டத்தின் மூலம் தினசரி 20 லட்சம் மாணவர்கள் காலை உணவு சாப்பிடுகிறார்கள். மகளிர் உரிமைத் திட்டம் மூலம் 1.15 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. புதுமை பெண் திட்டத்தின் கீழ் 3.78 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குகிறோம். அதேபோல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு உதவும் வகையில் இன்று தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3.78 லட்சம் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, தந்தையாக இருந்து இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். இதற்காக ரூ.380 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக கொண்டு வரவேண்டும்.''  என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News