பகவதி அம்மன் பரிவேட்டை ஊர்வலம்: அரசு மரியாதையுடன் துவக்கம்

குமரி பகவதியம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா நடைபெற்றது.

Update: 2023-10-24 12:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் திருவிழாவான விஜயதசமி நாளான மாலை நடந்தது. 

முன்னதாக மதியம்  கோவிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கோவிலின் வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் வெளியே வரும் போதும், கோவிலின் பிரதான நுழைவு வாசல் வழியாக சன்னதி தெருவுக்கு வரும் போதும் போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளித்தனர். இதில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News