பாரதிதாசன் பல்கலை., பட்டமளிப்பு விழா: மோடி பங்கேற்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யின் 38வது பட்டமளிப்பு விழாவில், பிரதமா் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2023-12-28 01:47 GMT

திருச்சி பாரதிதாசன் பல்கலை.,யின் 38வது பட்டமளிப்பு விழாவில், பிரதமா் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள, முனையத்தை பிரதமா் நரேந்திர மோடி ஜனவரி 2-ஆம் தேதி தொடங்கி வைப்பதாகவும், இந்த நிகழ்ச்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலினும் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.‌

இந்நிகழ்வை தொடா்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறும் 38-ஆவது பட்டமளிப்பு விழாவிலும் பிரதமா் பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான மாணவா்கள் பட்டங்கள் பெறாத நிலையில் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News