பாரதிதாசன் பல்கலை., பட்டமளிப்பு விழா; மோடி பங்கேற்பு

பாரதிதாசன் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவி உட்பட பலர் உடனிருந்தனர்.

Update: 2024-01-02 05:59 GMT

திருச்சி- புதுக்கோட்டை சாலை மாத்தூர் அருகே உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் திருச்சி, தஞ்சை புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 154 உறுப்பு கல்லூரிகள் செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபருக்குள் நடத்தப்படும். ஆனால், 38- வது பட்டமளிப்பு விழா கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த 2021ம் ஆண்டிலிருந்து நடத்தப்படவில்லை.

இந்நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவ- மாணவிகளுக்கு இன்று(2-1-2024) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பாரத பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 154 கல்லூரிகளைச் சேர்ந்த 2,81,028 மாணவ மாணவிகள் பட்டம் பெறுகின்றனர். இதில் 30 பேருக்கு மோடி நேரடியாக பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அவர், கார் மூலம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Tags:    

Similar News