ராணிப்பேட்டை அருகே சுகாதார கட்டிட பூமி பூஜை: அமைச்சர் பங்கேற்பு

ஆற்காட்டில் தேசிய நகர்ப்புற சுகாதார பணி திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார நிலையம் கட்டிடம் கட்டும் பணிக்கு மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்...

Update: 2023-11-10 09:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி 26 வது வார்டு பகுதியில் இன்று தேசிய நகர்புற சுகாதார பணி திட்டத்தின் கீழ் 1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அமைப்பாளராக கலந்துக் கொண்ட மாநில கைத்தறி மற்றும் துணினூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி பூமி பூஜை போட்டு பணியினை துவக்கி வைத்தார்.. மேலும் கட்டிடம் கட்டும் பணி விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் தரமாக கட்ட வேண்டும் என அமைச்சர் ஆர் காந்தி ஒப்பந்த பணியாளிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எஎல் ஈஸ்வரப்பன் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News