நீர்த்தேக்க தொட்டி கட்ட பங்காரத்தில் பூமி பூஜை
பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராமம் யோஜனா திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது
Update: 2023-12-14 03:35 GMT
சின்னசேலம் அடுத்த பங்காரம் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராமம் யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை நடந்தது.