கபிலர்மலையில் தி.மு.க அலுவலக கட்டடம் கட்ட பூமி பூஜை.

பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் தி.மு.க கட்சி அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையை அமைச்சர் ம.மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

Update: 2024-03-05 15:31 GMT

பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கபிலர்மலையில் தி.மு.க கட்சி அலுவலகம் கட்டுவதற்கு 1960-ஆம் ஆண்டு நிலம் கட்சி சார்பில் வாங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் தற்போது தி.மு.க அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா இன்று நடைபெற்றது.

விழாவிற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை தாங்கினார். கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் கே.கே.சண்முகம் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில வர்த்தகர் அணி துணை தலைவர் கே.எஸ்.மூர்த்தி வாழ்த்தி பேசினார்.

வனத்துறை அமைச்சர் மருத்துவர் ம.மதிவேந்தன் அலுவலக கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டி பேசினார். வி்ழாவில் பரமத்தி ஒன்றியச் செயலாளர் தனராசு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளைக்கழக செயலாளர் கோபால் நன்றி கூறினார்.

Tags:    

Similar News