டி.என்.பாளையம் வனசரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் வனசரகத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-03-03 16:29 GMT

பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர்

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் வனசரகத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தமிழக வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நேற்று தொடங்கியது. இந்த 10 வனச்சரகங்களுக்கு உள்பட்ட பகுதியில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட பறவையாளர்கள், வன ஆர்வலர்கள், வனவர்கள், வனக்காவலர்கள் ஆகியோரை கொண்ட தனிக்குழுவினர் நிலவாழ் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக டி என் பாளையம் வன சரகத்திற்கு உட்பட்ட பங்களாபுதூர் மற்றும் கணக்கம்பாளையம் ஆகிய வனப்பகுதிகளுக்குள் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஓவ்வொரு கணக்கெடுப்பு பகுதிக்கும் இரண்டு பறவைகள் தன்னார்வலர்கள் வனப் பணியாளர்களுடன் கலந்து கொண்டு இந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

   டி.என்.பாளையம் வனசரகத்திற்கு உட்பட்ட கடம்பூர்;,விளாங்கோம்பை, பங்களாபுதூர் மற்றும் கணக்கம்பாளையம் உள்ளிட்ட வன பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்,

Tags:    

Similar News