பிட் இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-17 06:30 GMT

பிட் இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பங்காரம் லட்சுமி கல்வியியல் கல்லுாரியில் 'பிட் இந்தியா' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் சசிகலா வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி இயக்குனர் செல்வகுமார் 'பிட் இந்தியா' குறித்து விளக்கிப் பேசினார். எலவனாசூர்கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சாமிதுரை, கல்லுாரி முதல்வர் சிராஜூதீன், கல்வியியல் கல்லுாரி முதல்வர் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர். ராமச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News