அராஜகத்தின் வெளிப்பாடுதான் பாஜகவும், அண்ணாமலையும் - கே. பாலகிருஷ்ணன்

பிரதமர் 3 நாள் ஆன்மீக பயணத்திற்கு தமிழகம் வந்துள்ளார். ஆனால் புயல், மழையின் போது தமிழ்நாட்டை கண்டுகொள்ளவில்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை அவமானப்படுத்தி வருகிறார். பத்திரிக்கையாளர்களையும் செய்தியாளர்களையும் அவமானப்படுத்தும் அண்ணாமலையின் பேட்டிக்கு எதற்கு தொடர்ந்து செல்கிறீர்கள். அராஜகத்தின் வெளிப்பாடுதான் பாஜகவும் அண்ணாமலையும் என தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2024-01-22 02:58 GMT

கே. பாலகிருஷ்ணன் 

தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிபிஎம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களும் பேசுகையில். பிரதமர் செய்யக்கூடாத பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயிலை கட்டி கும்பாபிஷேகம் செய்வதன் மூலம் சிறுபான்மையினரின் வெறுப்புக்கு உள்ளாகிறார் பிரதமர் மோடி. இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தை இந்து மக்கள் யாரும் முழுமையாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பிரதமர் அந்தக் கோயில் பணியை செய்வது முற்றிலும் அரசியல் தான் தொடர்ந்து அரசியல் சாசனத்திற்கு விரோத செயல்களை பிரதமர் மோடி செய்து வருகிறார். கோவில்களின் அபிஷேகத்தை செய்வதற்காக மத்திய அரசு இருக்கிறது  அயோத்தி ராமர் கோயில் விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு வந்த போது இது அரசியல் நிகழ்வாக உள்ளது எனவே அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எப்பொழுதும் ஏற்காது. பிரதமர் மூன்று நாள் பயணமாக ஆண்மீகபயணத்திற்கு தமிழகத்திற்கு வந்திருந்தார் ஆனால் புயல் மழையின் போது தமிழ்நாட்டை கண்டுகொள்ளவில்லை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பத்திரிக்கையாளர் ஊடகவியலாளர்களை அவமானப்படுத்தி வருகிறார். பத்திரிக்கையாளர்களையும் செய்தியாளர்களையும் அவமானப்படுத்தும் அண்ணாமலையின் பேச்சுக்கு எதற்கு ஊடகவியலாளர்கள் தொடர்ந்து செல்கிறீர்கள். அராஜகத்தின் வெளிப்பாடுதான் பாஜகவும் அண்ணாமலையும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை எதற்கு? திமுகவின் சேலம் இளைஞர் மாநாட்டை வரவேற்கிறேன். என்றார் 
Tags:    

Similar News