மம்தா பானர்ஜியை இழிவுப்படுத்திய பாஜக வேட்பாளர் அபிஜித் !!
2018 முதல் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் கொல்கத்தா உயிர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து அழகிய அபிஜித் காங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மே 15 அன்று நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அபிஜித் மம்தா பானர்ஜி என்ன விலைக்கு உங்களை விற்கிறீர்கள்.
உங்கள் விலை ரூ.10 லட்சம் ஏனென்றால் நீங்கள் மேக்அப் போடுகிறீர்கள். மம்தா பானர்ஜி ஒரு பெண் தானா ? என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் எழுகிறது என்று தெளிவாகப் பேசி உள்ளார் அபிஜித்.
இதன் அடிப்படையில் பாஜக வேட்பாளரான அபிஜித் காங்கோபாத்யாய் தேர்தல் பரப்புரை செய்ய 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று மாலை 5 மணியிலிருந்து இந்த தடை அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபிஜித் போட்டியிடும் தம்லுக் தொகுதிக்கு வரும் 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.