பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு - கோவையில் அண்ணாமலை போட்டி

பாஜக வேட்பாளர்களாக நீலகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன், கோவையில் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Update: 2024-03-22 02:48 GMT

தமிழகத்தில் 19 தொகுதிகளில் பாஜக போட்டி. 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீடு நிறைவு, 4 தொகுதியில் பாஜக சின்னத்தில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டி. 24 தொகுதி வேட்பாளர்களுடன் டெல்லி செல்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாஜக - 20 பாமக - 10 அமமுக - 2 ஐஜேகே - 1 புதிய நீதிக்கட்சி - 1 தமாகா - 3 இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் - 1

அதனைத் தொடர்ந்து பாஜக தரப்பில் தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தென் சென்னை - தமிழிசை சௌந்தரராஜன். மத்திய சென்னை - வினோஜ் P. செல்வம். வேலூர் - AC சண்முகம். கிருஷ்ணகிரி - நரசிம்மன். நீலகிரி - எல்.முருகன். கோயம்புத்தூர் - அண்ணாமலை. பெரம்பலூர் - பாரிவேந்தர். திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன். கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன்.

Tags:    

Similar News