பாஜகவால் 150 தொகுதிகளில் கூட வெல்ல முடியாது - அனிதா ராதாகிருஷ்ணன்

வரும் மககளவை தேர்தலில் பாஜ 150 தொகுதியில் கூட வெல்ல முடியாது. ராமர் கோயிலை வைத்து ஏமாற்றி வருகின்றனர். தில்லியில் இந்தியா கூட்டணிதான் ஆள போகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சுட்டிகாட்டுபவர்தான் பிரதமாக வருவார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2024-01-16 04:53 GMT

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் ராஜபாண்டி தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, ஒன்றிய பொருளாளர் ஆனந்த், மத்திய ஒன்றிய திமுக செயலர் பொன் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலர் பாலமுருகன் வரவேற்றார்.  இதில் தெற்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை மராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழா தொடங்கி வைத்ததுடன், திமுக கிளை, சார்பு நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசுதொகையும பெண் நிர்வாகிகளுக்கு சேலையும் வழங்கினார். 

அப்போது அவர் பேசுகையில், ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பெறும் வகையிலும், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அரவணைக்கும் வகையில் ரூ 6 ஆயிரம் வழங்கியும் மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி எம்பியை எதிர்த்து போட்டியிடும் எதிர் கட்சியினர் அனைவரும் டெப்பாசிட் இழப்பது உறுதி. திமுக ஆட்சியில்தான் அதிக இநது கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி உள்ளிட்ட தமிழகதத்¤ல் 40 தொகுதிகளையும் திமுக - காங்கிரஸ் கூடடணி வெற்றி பெறும். தமிழகத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஆனால் வடநாட்டில் உள்ளவர்களுக்கு அள்ளி கொடுக்கின்றனர். மத்திய நிதி அமைச்சர் நிதி தர மறுக்கிறார். அமலாக்கத்துறையை வைத்து மிரட்டினாலும் திமுக பயப்படாது.  வரும் மககளவை தேர்தலில் பாஜ 150 தொகுதியில் கூட வெல்ல முடியாது. ராமர் கோயிலை வைத்து ஏமாற்றி வருகின்றனர். வரும் மக்களவை தேர்தலில் கனிமொழி எம்பிதான் வேட்பாளராக நிறுத்தப்படுவார். அவர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். .

வரும் 22 ஆம்தேதி நடக்கும் வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். நாம்தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல போகிறோம்.  அந்த தெம்போடு திமுக வினர் பணியாற்ற வேண்டும். தில்லியில் இந்தியா கூட்டணிதான் ஆள போகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் சுட்டிகாட்டுபவர்தான் பிரதமாக வருவார். இளைஞரணி மாநாடு வரும் 21ஆம்தேதி சேலத்தில் நடைபெறுகிறது. இங்கிருந்து 20ஆம்தேதி அனைவரும் புறப்பட்டு செல்கிறோம். அனைத்து இளைஞர்களும் உறுதுணையாக இருந்து பங்கேற்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News