தருமை ஆதீனம் விவகாரத்தில் சிறையில் இருந்த 4 பேரை போலீஸ் விசாரணைக்குப் பிறகு மீண்டும் சிறையில் அடைத்தனர். மயிலாடுதுறை பாஜக மாவட்டதலைவர் அகோரத்திற்கு எதிராக ஒரு பாஜக மாவட்டப் பொதுச்செயலாளரே அப்ரூவராக மாறி களமிறங்கியுள்ளது மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தருமை ஆதீனம் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருந்த காட்சியை வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். ஆபாச வீடியோவில் ஆதீனம் சிக்கிக் கொண்டதால் நிச்சயம் காவல்துறைக்கு ஆதீனம் செல்லாது என்று உறுதியாக நம்பியவர்கள் பாஜகமாவட்ட தலைவர் அகோரத்தின் ஆலோசனையின்படி செயல்பட்டுள்ளனர். ஆனால் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்தபுகாரில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் உட்பட 9 நபர்கள் சிக்கிக்கொண்டனர். முதல்கட்டமாக 4பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர், அவர்களிடமிருந்து போதிய ஆதாரம் சிக்கியிருந்தது, மேலும் சில ஆதாரங்கள் தேவைப்பட்டதால் 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மயிலாடுதுறைபோலீசார் முடிவெடுத்தனர், அதற்காக மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அனுமதி வாங்கினர். 11ஆம் தேதியிலிருந்து 13ஆம்தேதி மாலைவரை 2 நாள் விசாரித்தனர், 3 நபர்களை அவரவர்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்று ஒருசில தடயங்களைக்கைப்பற்றினர். இதற்கிடையே போலீஸ் கஸ்ட்டடி எடுத்த நபர்களில் ஒருவர் ஆபாச வீடியோக்களைக் காட்டி ஆதீனத்திடம் பணம்கேட்டது உண்மைதான் என்றும் நடந்த உண்மையை நான் ஒத்துக்கொள்கிறேன் என்று தஞ்சை பாஜகவின் வடக்கு மாட்ட பொதுச் செயலாளர் வினோத் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைப் பெற்றுக் கொண்ட மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் அழகேசன் தலைமையிலான தனிப்படையினர், போலீஸ் கஸ்டடி முடிந்து மருத்துவ பரிசோதனை செய்த சான்றிதழுடன் வினோத், விக்கி, ஸ்ரீநிவாஸ்,குடியரசு ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், நீதிபதி கலைவாணி, வரும் 27ஆம் தேதி 4 நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டார், அதன்பேரில் 4 நபர்களையும் போலீசார் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர். கைப்பற்றப்பட்ட விடியோ காட்சியின் உண்மைத்தன்மை அறிய தொழில்நுட்ப நுண்ணறிவு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது: இரண்டு நாள் போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இவ்வழக்கில் பள்ளி தாளாளர் குடியரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்; விஜயபிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த வழக்கில் உள்ள பாஜக மாவட்ட தலைவர் அகோரம், ஆதீன நேர்முக உதவியாளர் செந்தில், செம்பனார்கோவில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார், செய்யாறு அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், போட்டோகிராபர் பிரபாகரன் ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் திருக்கடையூர் விஜயகுமார் தங்களுக்கு உதவி செய்தவர் என்றும் அவருக்கும் இந்த வழக்கில் தொடர்புமில்லை என்று ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை போலீசில் கடிதம் கொடுத்தார். கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் ஆதீனத்தின் சகோதரரை மிரட்டியதாக கொலை முயற்சி, கூட்டுசதி என்று பல கடுமையான சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எஃப்ஐஆரில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரின் பெயர்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அகோரத்துக்கு மட்டும் பாஜக மாவட்ட தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளனர். பாஜக மீது அவதூறு பரப்பும் வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வழக்கில் உள்ள வினோத் அப்ரூவராக மாறியுள்ளார். தனியார் கல்வி நிறுவனத்தை ஆதீன நிர்வாகம் விலைக்கு கேட்டு கொடுக்க மறுத்ததால் குடியரசு இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 4 பேர் வீடுகளில் சில சிடிக்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. என்ன வீடியோ அதில் யார் யார் என்ன செய்கிறார்கள் என்ற விபரம்இதுவரை தெரிவிக்கவில்லை, விடியோ காட்சியின் உண்மைத்தன்மை அறிய தொழில்நுட்ப நுண்ணறிவு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளநிலையில் இந்த வழக்கு யாரோ சிலரின் தூண்டுதலின்பேரில் போடப்பட்டுள்ளது என்றார். பாஜகவின் மாவட்டப் தலைவர் அகோரம் கடந்த மாதம் 28ஆம்தேதி காலையில் வீட்டிலிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார், ஏற்கனவே பாமக சார்பில் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் நின்று தோற்றவர், 2014ஆம் ஆண்டு பாமக சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேத்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர், இந்த அனுதாபத்தை வைத்துக்கொண்டு மீண்டும் இந்த மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் நின்று வெற்றிபெறலாம் என்ற எண்ணத்தில் காயை நகர்த்தியபோது சற்றும் எதிர்பாராதவிதமாக ஆடுதுறை வினோத் அப்ரூவராக மாறியதால் பாஜகவினர் ஒருவித அதிருப்தியில் உள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள செய்யாறு வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் என்பவர் மயிலாடுதுறை போலீசார் சென்ற மாதம் 28ஆம் தேதி வழக்குப் பதிவுசெய்தனர், ஆனால் அதற்கு இரண்டு தினங்கள் முன்பு 26ஆம்தேதியே சென்னை விமான நிலையம் வழியாக தாய்லாந்து சென்றுள்ளார், இதை மோப்பம் பிடித்த போலீசார் இந்தியாவில் எந்த ஏர்ப்போர்ட் மற்றும் கடல் மார்க்கமாக வந்தாலும் அவரை மயிலாடுதுறை போலீசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.