அகில இந்தியளவில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பாஜக: கி. வீரமணி

அகில இந்தியளவில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பாஜக என் கி. வீரமணி விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2024-03-11 09:28 GMT
மாலை அணிவித்த வீரமணி

இந்திய அளவில் பாஜக தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது. அதனால் தான் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார்  எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.  மணியம்மையாரின் 105 ஆவது பிறந்தநாளையொட்டி,

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் பெரியார் மற்றும் மணியம்மையாரின் சிலைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தேர்தல் ஆணையர் தனது பதவி விலகியதற்கான காரணம் போகப் போக தெரியும்.

ஏற்கெனவே ஒரு வழக்கு வந்தபோது தேர்தல் ஆணையர்களை ஒன்றிய அரசு தாங்கள் விரும்புகிறபோது 7 அல்லது 8 முறை பதவி நீட்டிப்பு கொடுத்தபோது, அதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.  மாறாக, தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கு அரசியலமைப்பு சட்டப்படி குறிப்பிட்ட காலம் அவர்கள் பதவியில் இருப்பதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்றும்,

இந்த நியமனங்கள் சரியில்லை எனவும், புதிய நியமனம் வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சொன்னதை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. சிலிண்டர் விலையை ரூ. 100 குறைத்திருப்பதால் தமிழக பெண்கள் ஏமாற மாட்டார்கள். திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது ஏற்கெனவே எழுதப்பட்ட ஒரு முடிவு. இந்த முடிவை மாற்ற முடியுமா என்பதற்காகத்தான் ஏதேதோ செய்கின்றனர். மிகப்பெரிய மருத்துவர் அடிக்கடி ஓரிடத்துக்கு வருகிறார் என்றால்,

நோய் முற்றிப் போய்விட்டது என அர்த்தம். அதுபோல, தமிழகத்துக்கு மோடி அடிக்கடி வருகிறார் என்று சொன்னால், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் பாஜக தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதையே காட்டுகிறது.

பாஜக 370-இடங்களில் வெற்றி 377 - இடங்களில் வெற்றி எனக் கூறுகின்றனர். இவ்வளவு இடங்களில் வெற்றி பெறும் என்ற நிலையில், மற்ற கட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் என்ன? கதவு திறந்திருப்பதாக அவர்கள் கூறினாலும், வருவதற்கு ஆள்கள் இல்லை" என்றார் கி.வீரமணி.

Tags:    

Similar News