தமிழகத்தில் போதை மற்றும் வன்முறை கலாச்சாரம் ஒழிய வேண்டும்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், மக்களின் மீது அக்கறை தமிழக அரசுக்கு குறைந்து வருகிறது. தமிழகத்தில் போதை கலாச்சாரம் மற்றும் வன்முறை கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்..

Update: 2024-05-17 16:49 GMT

தமிழிசை சௌந்தரராஜன்

  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் வேலூர் செல்ல இருப்பதாகவும் அதனை வந்து செய்தியாக்க வேண்டும் என்று அழைத்ததன் பெயரில் சென்னை செய்தியாளர்கள் செய்தியினை சேகரிக்க சென்றனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரயில்வே காவல்துறையினர் செய்தி சேகரிக்க கூடாது என செய்தியாளர்களுக்கு இடையூறு செய்தனர். ரயில்வே போலீசார் செய்தியாளர்களை ஒருமையில் பேசி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ரயில் ஏறுவதற்காக வந்த தமிழிசை சௌந்தர்ராஜன், ரயில் நிலையம் வந்தார். இதனையடுத்து செய்தியாளரிடம் பேசியவர், செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க வரும் போது தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆர் பி எப் வீரர்கள் மீது அவர்களது உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க துறை ரீதியான அதிகாரிகளிடம் பேசுவதாக தெரிவித்தார். மக்கள் நன்றாக புரிந்து இருக்கிறார்கள் பிஜேபி NDA கூட்டணி அதிக பெரும்பான்மை வந்துவிட்டது, மத்தியில் 3 வது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார். மத ரீதியாக மக்களை பிரதமர் பிளவு படுத்துகிறாரா என்ற கேள்விக்கு, பிரதமர் யாரையும் அப்படி பிளவு படுத்தவில்லை என்றும் எல்லாரையும் ஒன்றாகத்தான் இணைக்கிறார், முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது என்றும், ஹஜ் பயணத்திற்கு பெண்களை அழைத்து செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பதாகவும், அனைத்து திட்டங்களையும் பெரும்பான்மை மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இணைத்து தான் தந்திருப்பதாகவும் மக்களை பிரித்தே வைத்திருந்தால் தான் காங்கிரஸ் ஓட்டு வாங்க முடியும் என்றும், இதை சிறுபான்மையினர் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று எனக்கு தெரியும்.

 தமிழகத்தில் போதை கலாச்சாரம் மற்றும் வன்முறை கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். பேருந்தில் பயணம் செய்தால் இருக்கைக்கு அடியில் கத்தி, அருவா போன்ற ஆயுதங்கள் இருக்கிறதா என்று நான் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News