”நான் வந்தால் தெரு விளக்குகளை அணைப்பது தான் தமிழகத்தின் கலாச்சாரமா மிஸ்டர் ஸ்டாலின்..?” - பாஜக தலைவர் ஜேபி நட்டா

திமுக என்றாலே ஊழலும் குடும்ப ஆட்சியும் தான் என விமர்சித்த பாஜக தலைவர்;

Update: 2024-02-12 05:00 GMT
Mk Stalin, JP Nadda

Mk Stalin, JP Nadda

  • whatsapp icon

”நான் வரும் வழியில் கடைகளை அடைத்து, தெருவிளக்குகளை அணைத்து நெருக்கடி காலம் போல் நடந்து கொள்வது தான் தமிழகத்தின் கலாச்சாரமா..?” என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். 

அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணம் 200 சட்டமன்ற தொகுதிகளை நிறைவு செய்வதை முன்னிட்டு சென்னை வள்ளலார் நகரில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். 

அவரது உரையில், ”பாஜக தலைவர்களின் இதயத்தில் தமிழகத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு. பிரதமரின் மனதிற்கு நெருக்கமான மாநிலமாக  தமிழகம்  உள்ளது. உலகில் எங்கு சென்றாலும் தமிழர்களை பற்றி பிரதமர் பேசுகிறார். நாடாளுமன்றத்தில்  நீதிக்கு அடையாளமான தமிழகத்தின் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் மிக உயரிய மொழி , கலாசாரம் , பண்பாடு , ஆன்மிகத்தை கொண்டுள்ளது. இவ்வளவு உயர்ந்த தமிழகம் மோசமான தலைமைத்துவம் கொண்டவர்களால் ஆளப்படுகிறது. இதை கூற நான் வருந்துகிறேன், திமுகவின் மோசமான ஆட்சி இங்கு நடக்கிறது. இன்று தமிழகத்தை ஆளுவோருக்கு மனசாட்சியே கிடையாது.

நான் வரும் வழியெங்கும் கடைகள் மூடப்பட்டுள்ளன, தெரு விளக்குகள் அணைக்கப்பட்டருக்கின்றன, காவலர்கள் ஏன் இவ்வளவு அதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர்..? இந்த சம்பவங்கள் எல்லாம் நாட்டில் முன்பு அமல்படுத்தப்பட்டிருந்த நெருக்கடி நிலையை நினைவுபடுத்துகிறது. மிஸ்டர் ஸ்டாலின் இதுதான் தமிழகத்தின் ஐனநாயகமா , கலாசாரமா..? உங்களை மக்கள் விரைவில் தூக்கி எறிவார்கள். 

திமுக என்றால்  குடும்ப ஆட்சி , பணத்தை கொள்ளையடிப்பது , கட்டா பஞ்சாயத்து என்று அர்த்தம். 200 நாளாக சிறையில் இருக்கும் அமைச்சர் (செந்தில் பாலாஜி) ஒருவர், இன்னும் சம்பளம் பெற்று வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணியில் திமுக உள்ளது. இந்த கூட்டணி தங்கள் குடும்பத்தை காப்பாற்ற அமைக்கப்பட்ட்டது. லஞ்சத்தில் வாங்கிய சொத்துகளை பாதுகாக்கவே உருவாக்கப்பட்டது. பரூக் அப்துல்லா, முலாயம் சிங், லல்லு பிரசாத், ஜெகன் மோகன், உத்தவ் தாக்கரே, சரத்பவார் போன்ற தலைவர்கள் குடும்ப ஆட்சி நடத்துவது போலவும்,  இந்திராகாத்தி , சோனியா காந்தி, ராஜிவ் காந்தி,  ராகுல் காந்தி பிரியங்கா காந்தி போலவும், தமிழகத்தில் கருணாநிதி , ஸ்டாலின் , உதயநிதி , என குடும்ப ஆட்சி நடத்துவோர் I.N.D.I.A கூட்டணியை அமைத்துள்ளனர்" என கடுமையான விமர்சித்தார். 

Tags:    

Similar News