''சவுக்கு சங்கர் குழுவை இயக்கியது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை'' - டிஜிபி அலுவலகத்தில் மனு !

Update: 2024-05-22 10:21 GMT

 சவுக்கு சங்கர் - அண்ணாமலை 

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் காண்டீபன் இன்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் வந்து காவல்துறை தலைவர் சங்கர் ஜிவாலை சந்தித்து மனு அளித்தார்.

அப்பொழுது காவல்துறை அதிகாரி குறித்தும் மற்றும் பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளார். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்பில் இருந்த முதலில் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்ய வேண்டும் என்று சங்கர் ஜிவாலிடம் வலியுறுத்தினார்.

Advertisement

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் காண்டீபன் பேட்டியளித்தார். 

''காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவல்துறை அதிகாரி குறித்து அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர்கள் இருவரும் கூட்டு சதி செய்து மக்களையும் பெண்களையும் அவதூறாக பேசி உள்ளனர்.

சவுக்கு சங்கர், பெலிப்ஸ் ஜெரால்ட் மட்டுமில்லாமல் இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டவர்களையும் கைது செய்ய வேண்டும். குறிப்பாக சவுக்கு மீடியா எடிட்டர் இன் சிப் முத்து லீப், லியே ஆகேயரை கைது செய்ய வேண்டும்.

தற்பொழுது முத்துலீப், தமிழ்நாடு ஆளுநரின் ஊடக ஆலோசகராக இருக்கும் திருஞானசம்பந்தம் என்பவர் உடன் இணைந்து செயல்படுகிறார்.

ஆகவே முத்துலீப், திருஞானசம்பந்தம் பாஜக நிர்வாகி அமிரசாத் ரெட்டி லியோ ஆகியோர் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் அரசுக்கு எதிராக கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கவர்னர் மாளிகைக்கு வரக்கூடிய அரசு ஆவணங்களை திருடி வெளியிட்டுள்ளனர். அமைச்சர்கள் அதிகாரிகள் நிறுவனத்தினரை மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

இவர்களை இயக்கியது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. ஆகவே அண்ணாமலை செல்போன் என் மட்டுமின்றி மற்ற நான்கு பேரின் செல்போன் எண்ணின் அழைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீதும் முதலமைச்சர் அமைச்சர்கள் மீதும் எந்தவித ஆதாரம் இல்லாமல் அவதுறை பரப்பி வந்துள்ளனர். மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். அரசு எதிராக செயல்பட்டுள்ளனர். இது ஒரு தேச விரோத செயல்.

இவர்கள் தீர விசாரிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் யூட்யூபில் நல்ல கருத்துக்கள் வரும்.'' என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News