சட்டப்பேரவையில் பாஜக வெளிநடப்பு
சட்டப்பேரவையில் பாஜக வெளிநடப்பு செய்தது
சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த நீட் விலக்கு தொடர்பான தனித் தீர்மானத்தை ஏற்க மறுத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக முதலமைச்சர் நீட் தேர்வு வேண்டாம் என்று இன்று மீண்டும் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். நீட் தேர்வை பொருத்தவரை இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் குடியரசு தலைவருக்கு தீர்மானத்தை அனுப்பினர். 7.5 சதவீத இட ஒதுக்கீடுகள் கேட்டனர். அது வழங்கப்பட்டது. எம்.பி.பி.எஸ் படிக்க ஒரு கோடி, முதுகலை படிப்புக்கு ஐந்து கோடி வரை ஆகும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் சுலபமாக ஏழை மாணவர்கள் படிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது. ஏற்கனவே முன்னாள் ஆட்சிக் காலத்திலும் தீர்மானம் போடப்பட்டது அது திருப்பி அனுப்பப்பட்டது இரண்டாவது முறை தற்போது நடக்காத விஷயத்திற்கு திரும்பத் திரும்ப தீர்மானம் போடுகிறார்கள். உண்மை மெதுவாக சேரும் பொய் வேகமாக சேரும் என்பது போல் திரும்பத் திரும்ப பொய் சொல்லி உண்மையாக பார்க்கிறார்கள் அரசியலாக்க பார்க்கிறார்கள். நீட் தேர்வு ஆரம்பித்து இத்தனை வருடங்களில் இதுவரை குழப்படி நடந்தது கிடையாது.
ஒரு மாநிலத்தில் ஒரு தேர்வு முறையில் குளறுபடி நடந்துள்ளது. அதன்மீது அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் வினாத்தாள் கசிவு நடைப்பெற்றுள்ளது. அதற்காக அதனை ரத்து செய்ய முடியுமா? இதன்மூலம் நீட் தேர்வு விவகாரத்தை ஆதரிக்கவில்லை. தேசிய தேர்வு முகமை என்பது தனியார் அமைப்பு கிடையாது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓர் அமைப்பு தான் எனத் தெரிவித்தார்.