பாஜக 150 சீட் தாண்டாது.. அடித்துக் கூறும் ஆர்.எஸ் பாரதி!

Update: 2024-04-06 07:47 GMT

ஆர்.எஸ் பாரதி

 நாடாளுமன்றத் தேர்தலில் 150 இடங்களுக்கு மேல் பாஜக வெல்லாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பிரச்சாரத்தின் போது விமர்சித்துள்ளார்.

அவர் பேசியபோது," பிரதமர் மோடி இதுவரை நான்கு முறை தமிழகம் வந்துள்ளார். இன்னும் நான்கு முறை தமிழகம் வருவார். எத்தனை முறை வந்தாலும் பிரதமரின் பிரச்சாரம் தமிழ்நாட்டில் எடுபடாது.

உத்திர பிரதேசத்திலும் பாஜக அவ்வளவு தான். பீகார், ஹரியானா மத்திய பிரதேசத்திலும் பாஜக வெல்லாது. சொந்த மாநிலமான குஜராத்திலும் பாஜக படுதோல்வி அடையும்.

இதனால்தான் தமிழக பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு அமித்ஷா குஜராத்தில் முகாமிட்டுள்ளார்.

மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழகத்திலும் வெல்ல முடியாது மொத்தமாக 150 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறவே முடியாது." இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News