குற்றாலம் வெள்ளத்தில் சிறுவன் பலி - அருவியில் அடித்து செல்லப்படும் சிறுவன்- வீடியோ காட்சி !!!
கோடை விடுமுறை என்பதால் பரவலாக மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மே 20 தேதி வரை தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகம் மலையும் பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குற்றாலத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிக்கு சுற்றுலா வந்த மக்கள் குற்றாலத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென காற்றுடன் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து படிக்கட்டுகளை தாண்டி ஓடி வந்தது தண்ணீர் அதிகரித்தும் அங்கிருந்து பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.
இதில் தண்ணீர் விழுந்த போர்சில் அங்கு குளித்துக் கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த 16 வயது சிறுவன் பள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதை அடுத்து அந்த சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் மேற்கொண்டனர். சிறிது நேரத்தில் நீரின் வரத்து குறைந்தது 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. அந்த சிறுவனின் தாய் கதறி அழுத காட்சி காண்போரை பதைபதைக்க வைத்தது.
இந்த நிலையில் சிறுவன் நீரில் அடித்து செல்லப்படும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் சிறுவன் வெள்ளத்தில் படுத்தபடியே மிதந்து வருகிறார். ஆனால் தண்ணீரின் போர்ஸ் அதிகப்படியாக இருந்ததால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது. வீடியோவில் அந்த சிறுவன் உருண்டு திரண்ட படி பார்க்கும் போது மனம் பத பதைக்கிறது. இந்த சிறுவனுக்கு யாராவது நம்மை காப்பாற்ற மாட்டார்களா என்ற எண்ணம் வந்திருக்குமே! பழைய குற்றாலத்தில் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சுற்றுலா பயணிகள் உசார் ஆகி குளிக்காமல் வந்து விடுவார்கள்.
காரணம் மழையில் இருந்து நேரடியாகவோ இந்த மழை பழைய குற்றாலத்திற்கு தண்ணீர் வருகிறது திடீரென்று நீர்வரத்து அதிகரிப்பது பயணிகளுக்கு தெரியாது அதிக அளவு மழை இருக்கும் என தெரிந்து கொண்டு குளிப்பதை தவிர்த்து விடுவார்கள். பழைய குற்றாலத்தில் ஒரு பெரிய பள்ளம் இருக்கிறது. இதனால் வெள்ளம் வந்தால் அந்த போர்சில் நேராக பள்ளத்திற்கு தான் செல்வார்கள். சிலர் நேற்றைய தினம் கம்பியை படித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.
ஆனால் கம்பியை விட்டால் நேரடியாக பள்ளத்திற்கு தான் அதில் உள்ள பாறைகளில் அடிபட்டு நேராகவே தண்ணீரில் முழ்கும் நிலை ஏற்படும் இந்த சம்பவத்தையடுத்து குற்றால அருகில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்ட அறிக்கையில் தென்காசி மாவட்டத்திற்கு மே 21ஆம் தேதி வரை ஆரஞ்சு கலர் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த ஆட்சியார் கமல் கிஷோர் வெளியிட்ட அறிக்கையில் தென்காசி மாவட்டத்திற்கு மே 21ஆம் தேதி வரை ஆரஞ்சு கலர் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் நீர் கடுப்பு பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் குற்றாலத்தில் உள்ள பிரதான அருவிகளுக்கான பழைய குற்றால அருவி, ஐந்தருவி மற்றும் இதர அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் குளிக்க தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது.