சோமநாதீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம்!
திமிரி கோட்டை பகுதியில் உள்ள சோமநாதீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.;
Update: 2024-03-22 06:30 GMT
தேர் திருவிழா
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி கோட்டை பகுதியில் அமைந்துள்ள தனுமத்யம்பாள் சமேத சோமநாதீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சோமநாதீஸ்வரருக்கு பலவித வண்ண மலர்கள் மற்றும் தங்க ஆபரணங்களை கொண்டு அலங்கரித்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் வந்த போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.விழாவில் திமிரி சஞ்சீவிராயன்பேட்டை செங்குந்தர் மரபினர், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.