மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - அமைச்சர் கீதா ஜீவன்
தமிழகத்தில் 2800க்கும் அதிமான அரசு அலுவலகங்களில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுய மார்பக பரிசோதனை செய்யும் விளக்கப்படம் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை அப்பலோ புரோட்டான் கேன்சர் சென்டருடன் இணைந்து பெண் களுக்கான சுய மார்பக பரிசோதனை முன்னெடுப்பு திட்டத்திற்கான விழிப்புணர்வு காணொளியும், விளக்க வரைபடத்தையும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்..
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 2286 ஆரம்ப சுகாதார மையங்களிலும் 434 குழந்தை வளர்ச்சி செயல் திட்ட அலுவலகங்களிலும், 38 மாவட்ட சமூக நல அலுவலகங்களிலும், மாவட்ட செயல் திட்ட அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து நகர மாநகராட்சி அலுவலகங்களிலும் மார்பக புற்றுநோய் விளக்க வரைபடமும் விளக்க காணொளியும் காட்சிபடுத்தபட உள்ளது.
இந்நிகழ்வில் சமூக நலத்துறை முதன்மை செயலர் சுன்சோங்கம் ஜடக், ஆணையர் அமுதவல்லி உள்ளிட்ட அரசு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர், முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன்..,
சென்னையில் ஒரு லட்சம் பெண்களில் 46.4 சதவீகிதம் பெண்களுக்கு இந்த மார்பக புற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக விழிபுணர்வை அனைத்து பெண்களுக்கும் எடுத்து செல்லும் போது மார்பக புற்றுநோயால் ஏற்படும் இறப்பை தவிர்க்க முடியும்..,
ஆரம்ப சுகாதார நிலையம் துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இது போன்ற விழிபுணர்வு நிகழ்வுகளை மேற்கொள்ள உள்ளோம்.
தமிழகத்தில் 2800க்கும் அதிமான அரசு அலுவலகங்களில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுய மார்பக பரிசோதனை செய்யும் விளக்கப்படம் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் மார்பக புற்று நோய் அறுவை சிகிச்சை செய்ய முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
மார்பகபுற்று நோய் சிகிச்சை பொறுத்த வரையில் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கபடுகிறது என்றார்.