மின் இணைப்புக்கு லஞ்சம் - இளநிலை மின் பொறியாளர் உட்பட 3 பேர் கைது

ஆர்.கே.பேட்டை அருகே மின் இணைப்புக்கு  ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை மின் பொறியாளர் உட்பட மூன்று பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-29 03:37 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம்  விடியங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு நெசவாளர்.  விசைத்தறி தொழிலுக்கு தமிழக அரசு ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகின்றது. இதன் மூலம் பயன் பெற பாபு அவரது தாமார் கோதாவரி பெயரில் புதிய மின் இணைப்பு பெற  ஆன்லைனில்  விண்ணப்பித்திருந்தார். அம்மனுவை வசாரித்த விடியங்காடு புதூர்மேடு  மின்வாரிய இள நிலை மின் பொறியாளர் சுரேஷ்(38) புதிய மின் இணைப்பு வழங்க ரூ. 6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகின்றது.

இருப்பினும் லஞ்சம்  வழங்க விருப்பம் இல்லாத பாபு திருவள்ளூரில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு  புகார் செய்துள்ளார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்  அறிவுறுத்தலின் படி   விடியங்காடு புதூர் மேடு இளநிலை பொறியாளர் அலுவலகம் சென்ற பாபு  இளநிலை மின் பொறியாளர் சுரேஷ் கூறிய படி அங்கிருந்த  வயர்மென்கள் நித்யானந்தம்(40), சண்முகம்(53) ஆகியோரிடம்  ரசாயணம் தடவிய ரூ. 6 ஆயிரம் வழங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமையிலான  லஞ்ச ஒழிப்பு துறையினர்  நித்யாணந்தம்,  சண்முகம் ஆகியோரை  மடக்கிப்பிடித்து பணம் பெற்றுக்கொள்ள  கூறிய மின் இளநிலை பொறியாளர் சுரேஷ் உட்ப்ட மூன்று பேரை கைது செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மூன்று பேரை கைது செய்த சம்பவம் தெரிந்துக்கொண்ட கிராமமக்கள்  மின் வாரிய அலுவலகத்தில் 50க்கும் மேற்ப்பட்ட்டோர் குவிந்து லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கியவர்களை புகைப்படம் எடுக்க சென்ற செய்தியாளர்களை தடுத்து மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. சுமார் 5 மணிநேரம் விசாரணைக்கு பிறகு  கைது செய்யப்பட்ட மூவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில்  ஆஜர்ப்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News