ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து பணம், துணிகள் திருட்டு
கோவில்பட்டியில் ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து பணம், துணிகளைத் திருடிய மர்ம நபா்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-01-30 07:26 GMT
ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து பணம், துணிகள் திருட்டு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல், மேலப்பட்டி விலக்கைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கனகராஜ் (41). முன்னாள் ராணுவ வீரரான இவா், அதே பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். சம்பவததன்று அந்தக் கடையின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்து, கடையிலிருந்து ரூ. 7 ஆயிரம், ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான வேட்டிகள், பட்டுச் சேலைகள், கைப்பேசி, முன்னாள் ராணுவ வீரா் அடையாள அட்டை, ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற்கான சான்று உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றனராம். இதுகுறித்து கனகராஜ் அளித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனர்.