பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
மனித சங்கலி போராட்டம்
பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5 ஜி அலைவரிசையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக செயல்படும் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி மற்றும் 5 ஜி அலைவரிசையை உடனடியாக வழங்க வேண்டும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்க வேண்டும், ஊழியர்களுக்கு சம்பளம் மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மூன்றாவது ஊதிய உயர்வு மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு புதிய பதவிஉயர்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் எம்ப்ளாய் யூனியன் மாவட்ட தலைவர் ஹரிஹரன் தலைமையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது.
பிஎஸ்என்எல் அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல் எம்பிளாய் யூனியன் சங்க செயலாளர் கோபால்,ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழ்மணி ஒப்பந்த தொழிலாளர்கள் மாவட்ட செயலாளர் செல்வம் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.