முதல்வருக்கு நன்றி தெரிவித்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள்
கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு நல வாரியம் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேபிள் ஆபரேட்டர்கள் மனு அளித்தனர்.
Update: 2024-01-23 04:28 GMT
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம், தமிழ்நாடு அனைத்து உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் கேபிள் டிவி வரலாற்றில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக, தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல வாரியம் அமைத்து கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது. நல வாரியம் அமைவதால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தனிநபர் விபத்து உதவி, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை போன்றவை வழங்கப்பட இருக்கிறது. இந்த நலவாரியத்தை அமைத்து உத்தரவிட்ட முதல்வர் மற்றும் இதற்காக உழைத்த அனைத்து பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியிருந்தனர். இதில் திருப்பூர் டிஜிட்டல் சிக்னல் வினியோகிஸ்தர் தலைமையில் ஆபரேட்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.