வீட்டு மனைப்பட்டா மனுக்கள் பெறும் முகாம்
கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்;
Update: 2023-12-08 08:06 GMT
வீட்டு மனைப்பட்டா மனுக்கள் பெறும் முகாம்
உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் வீட்டு மனைப் பட்டா மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமை தாங்கினார். மணிக்கண்ணன் எம்.எல்.ஏ,ஆர்.டி.ஓ., கண்ணன் ஆகியோர் கிராம மக்களிடம் மனுக்களை பெற்றனர். ஊராட்சி தலைவர் நந்தகுமார் வரவேற்றார். முகாமில் தாசில்தார்கள் உளுந்துார்பேட்டை விஜயபிரபாகரன், திருக்கோவிலுார் மாரியபிள்ளை, (சமூகநலம்) கண்ணன், (ஆதிதிராவிடர்நலம்) மணிமேகலை, வருவாய் ஆய்வாளர் மீனாட்சி, ஊராட்சி துணை தலைவர் ஷம்ஷாத், வருவாய் அலுவலர்கள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.