திமுக வெற்றி பெற பிரச்சாரம் - எர்ணாவூர் நாராயணன்.

வரும் மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார்.

Update: 2024-03-12 01:09 GMT

எர்ணாவூர் நாராயணன் 

சமத்துவ மக்கள் கழகத்தின் 9 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் எர்ணாவூர் நாராயணன். தமிழ்நாடு பனை வாரிய தலைவரும் சமத்துவ மக்கள் கழகம் தலைவருமான எர்ணாவூர் நாராயணன் சமத்துவ மக்கள் கழக கட்சி ஒன்பதாவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருவொற்றியூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளதாகவும் அனைத்து மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதியிலும் திமுக வெற்றி பெற பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.
Tags:    

Similar News