ஆசிரியர் இடமாற்றம் ரத்து - கல்வி அலுவலரிடம் மாணவிகள் முறையிடு
சேலம் உடையாபட்டி பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் வேதியல் ஆசிரியராக இருந்த ஜெயந்தி என்பவர் வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் மீண்டும் அதே ஆசிரியர் பள்ளிக்கு வர வேண்டும் என்று பலமுறை தலைமை ஆசிரியருக்கு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு தலைமை ஆசிரியர் மாணவிகளை டிசி வழங்கி விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் நேற்று இரவு அந்தப் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து முதன்மை கல்வி அதிகாரியை சந்திக்க வேண்டும் என்று கூறி காத்திருந்தனர். இதனையடுத்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நேரில் வந்து அவர்களிடம் பேசினார். அவரிடம் மீண்டும் எங்களுக்கு அதே ஆசிரியர் வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்ததால் மாணவிகள் கலைந்து சென்றனர் இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.