யுவராஜுக்கு முதல் வகுப்பு சிறை வழங்க முடியாது - தமிழக அரசு

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜ் சிறையில் முதல் வகுப்பு ஒதுக்க வேண்டுமென உரிமையாக கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு அளித்துள்ளது.

Update: 2024-06-09 03:03 GMT

கோகுல்ராஜ் - யுவராஜ்

 கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜ்க்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கக் கோரி அவரது மனைவி சுவிதா மனு அளித்துள்ளார். யுவராஜின் சமூக அந்தஸ்து மற்றும் அவரது கல்வித் தகுதி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. சமூகத்தில் யுவராஜ் செய்த குற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு அவருக்கு முதல் வகுப்பு வழங்க கூடாது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளித்துள்ளார் என அரசு பதில் மனு அளித்தது. கொடும் குற்றம் புரிந்தவர்களுக்கு முதல் வகுப்பு ஒதுக்கக்கூடாது என சிறை விதிகள் உள்ளன என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணை ஜூன் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

Similar News