கார்கள் மோதல் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி, 3 பேர் படுகாயம்
சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்து பவானிசாகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2024-05-01 09:23 GMT
விபத்தில் உயிழந்த கணவன், மனைவி மற்றும் குழந்தைகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நெசவாளர் காலனி என்ற இடத்தில் கரூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற காரும், தனியார் உணவகத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற காரில் பயணம் செய்த சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்த முருகன், அவரது மனைவி ரஞ்சிதா, மகன் 8 வயது அபிஷேக், மகள் 7 வயது நித்திஷா உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள் . தனியார் உணவகத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த சொகுசு காரை ஒட்டி வந்த அக்சரா மோகன், சுஜித் விஷால் பத்ரி உள்ளிட்ட மூவருக்கு லோசான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்து போன 4 பேரின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டது. இந்த விபத்து குறித்து பவானிசாகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.