கல்லூரியில் அத்துமீறி நுழைந்த அதிமுகவினர் 22 பேர் மீது வழக்கு
வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து செயல்பாட்டில் இல்லாத கழிவறையை படம் பிடித்து வதந்தி பரப்பிய அதிமுக மகளிரணி நிர்வாகிகள் உட்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Update: 2024-02-15 08:44 GMT
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பகுதியில் அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் கிராமத்தில் இருந்து 10000 க்கு மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 8 ம் தேதி கல்லூரி நிர்வாகத்திடம் எந்த அனுமதியும் பெறாமல் அதிமுக மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா உட்பட 22 பேர் கல்லூரியில் அத்துமீறி நுழைந்து செயல்பாட்டில் இல்லாத இருந்த கழிவறை சுத்தம் செய்வதுப்போல் வீடியோவாக எடுத்து கல்லூரி நற்ப்பெயரை கெடுக்கும் வகையில் கல்லூரி மாணவிகள் புகார் சொன்னதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியுள்ளனர். இதனால் கல்லூரி முதல்வர் சீனிவாசன் கல்லூரி பெயரை கெடுக்கும் வகையில் செயல்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகளிர் நிர்வாகிகள் 20 பேர் உட்பட 22 பேர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.