முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கு மார்ச் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

தலைமறைவான முன்னால் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, பாஸ்போர்ட்டை முடக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என சிபிசிஐடி சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்.;

Update: 2024-03-12 18:54 GMT

டிஜிபி ராஜேஷ் தாஸு

சென்னையில் தலைமறைவான முன்னால் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, பாஸ்போர்ட்டை முடக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என சிபிசிஐடி சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல். தண்டனையை அனுபவிக்கும் வகையில் ராஜேஷ் தாஸை கைது செய்து ஆஜர்படுத்துமாறு மார்ச் 8ல் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. கைது செய்ய வீட்டிற்கு சென்றபோது அவர் தலைமறைவானதாக சிபிசிஐடி தெரிவித்தது. பெண் எஸ்.பி.-க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்த உத்தரவை நிறுத்திவைக்கவும், சரணடைவதில் விலக்கு அளிக்கவும் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கு மார்ச் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News