செல்போன் பேசிக் கொண்டு கார் ஓட்டிய வழக்கு - மதுரை பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன் கைது !!

Update: 2024-05-30 05:18 GMT

 டி.டி.எஃப். வாசன் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செல்போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரபல youtube டிடிஎஃப் வாசனை மதுரையில் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 15ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் சென்றுள்ளார்.

யூடியூபர் டி.டி.எஃப். வாசன் மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் சென்றபோது அஜாக்கிரதையாகவும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகவும் செல்போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டியுள்ளார். அதனை வீடியோவாகThrottlers என்ற youtube சேனலில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து மதுரை மாநகர சமூக ஊடகப் பிரிவு கண்காணிப்பு அலுவலர் மணி பாரதி என்பவர் அழைத்த புகாரின் கீழ் அண்ணா நகர் காவல் நிலையத்தில் டிடிஎஃப் வாசன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர். மதுரை அண்ணாநகர் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே காஞ்சிபுரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டிய வழக்கில் அவருடைய ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கார் ஓட்டுவதற்கான LLR விண்ணப்பத்தை பெற்று அதன் மூலம் டிடிஎஃப் வாசன் கார் ஓட்டிவந்த நிலையில் அதிலும் போக்குவரத்து விதிகளையும் மோட்டார் வாகன சட்ட விதிகளையும் மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News