அதிமுக தென்சென்னை வேட்பாளர் மீது வழக்கு பதிவு

அதிமுக வேட்பாளர் அலுவலக கூட்டம் அனுமதி இன்றி நடத்தப்பட்டதாக தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-03-25 16:05 GMT

கோப்பு படம் 

அதிமுக சார்பில் அனுமதியின்றி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தியதாக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப் பதிவு கண்காணிப்பு நிலை குழு அதிகாரி கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரி, காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மணடபத்தில் நேற்று அதிமுக சார்பில் தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயவர்தன் கலந்து கொண்ட வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி கூட்டம் நடத்தியும், பொதுமக்களுக்கு இடையூறாக கொடிகளை வைத்திருந்தனர்.

தகவல் அறிந்து சென்ற கண்காணிப்பு நிலைக்குழு அதிகாரி கூறியும் கூட்டத்தை தொடர்ந்து நடத்தினர் இதனால் அவர்கள் தரமணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News