உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட பணம் ரூ.77,000 பறிமுதல்!
அரக்கோணம் அருகே ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 77,000 நிலை கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
Update: 2024-04-02 17:06 GMT
பணம் பறிமுதல்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சுந்தரம் தலைமையிலான குழுவினர், கும்பினி பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் சூர்யா என்பவரிடம் இருந்து ரூபாய் 77 ஆயிரம் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் வட்டாட்சியர் செல்வியிடம் ஒப்படைத்தனர்.