மக்கள்தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை
மக்கள்தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.;
By : King 24x7 Desk
Update: 2024-09-09 10:33 GMT

செல்வப் பெருந்தகை
மக்கள்தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இருந்தால் பா.ஜ.க. ஆட்சியில் மக்களின் வாழ்வாதார நிலை, வறுமை சூழல் ஆகியவை குறித்த முழு விவரங்களும் வெளி வந்திருக்கும். 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் 20 கோடி பேரை வறுமையிலிருந்து மீட்டதாக கூறுகிற புள்ளி விவரம் உண்மையானதல்ல. தலைவர் ராகுல்காந்தி கோரிக்கையின்படி உடனடியாக மக்கள்தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனடியாக இணைத்து நடத்த வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.