குளறுபடி இல்லாமல் சாதிவாரி கணக்கெடுப்பு - நயினார் நாகேந்திரன்

இந்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நிச்சயமாக நடத்த வேண்டும், அதன் படி இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறோம், சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு குளறுபடி இல்லாமல் செய்து சமூக நீதியை காக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Update: 2024-06-27 06:00 GMT

நயினார் நாகேந்திரன்

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னர் சட்டப்பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், இன்று நாம் எடுக்கும் தீர்மானம் நாம் மறைந்தாலும் வரும் சந்ததியினர் சண்டயில்லாமல் சகோதரர்களாக வாழ வேண்டிய அளவிற்கு முடிவு எடுக்க வேண்டும் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

பீகார் மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் கணக்கெடுப்பு சிக்கல் மற்றும் குளறுபடியால் தான் நீதிமன்றம் தடை செய்தது. ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு தான் செய்ய வேண்டும் என சொல்லி இருக்கிறார். சாதி வாரி கணக்கெடுப்பதில் மாற்று கருத்து இல்லை. இந்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நிச்சயமாக நடத்த வேண்டும், அதன் படி இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறோம். சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு செய்ய வேண்டும், குளறுபடி இல்லாமல் செய்து, சமூக நீதியை காக்க வேண்டும்.

Tags:    

Similar News