சி.பி.எஸ்.இ பொது தேர்வு தொடக்கம்

சி.பி.எஸ்.இ பொது தேர்வு தொடங்கியது.

Update: 2024-02-15 10:11 GMT

கோப்பு படம் 

10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி நடைபெற இருக்கிறது. 10 மாணவர்களுக்கு இன்று தொடங்க இருக்கிற தேர்வு மார்ச் 13ஆம் தேதி நிறைவடைகிறது.

அதேபோல 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இரண்டாம் தேதி தேர்வுகள் நிறைவடைய இருக்கிறது. இந்த தேர்வினை 29 நாடுகளில் இருந்து 36 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.

இந்த தேர்விற்காக நாடு முழுவதும் 877 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10:30 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மதியம் 1. 30 மணிக்கு முடியும். குறிப்பாக டெல்லி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருவதால் டெல்லியை சுற்றி இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் காலை 10 மணிக்கு உள்ளாகவே தேர்வு மையங்களுக்கு உள்ளே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News