கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அரசியல் செய்கிறது - பிடிஆர் !
கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் பேசுவது அரசியல் நோக்கத்திற்காக தான் என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு பேட்டி அளித்த அவர், இலங்கையும், தமிழகமும் சுற்றுலாத்துறையில் இணைந்து செயற்பட்டால் சிறந்த முன்னேற்றத்தை எட்ட முடியும். மாநில அரசுகளின் உரிமைகளை சட்டத்துக்கு புறம்பாக, மத்திய பாஜக அரசு பறித்து வருகிறது. இந்தியா- இலங்கை இடையே மேம்பாலம் கட்ட அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது. மத்தியில் பாஜக அரசு இருக்கும் வரை தமிழகம்- இலங்கை இடையே வர்த்தக கலாச்சார உறவை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லை, கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அரசியல் செய்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் மக்களை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரத்தை பாஜக அரசு கையில் எடுத்தது'' என்றும் அவர் தெரிவித்தார்.