முறையாக பயன்படுத்தினால் மத்திய அரசு நிதி வழங்கும் - பொன்னார்
மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்தவில்லை என முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளாா்.;
Update: 2023-12-24 08:42 GMT
பொன்.ராதாகிருஷ்ணன்
முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: மிக்ஜம் புயலில் மாநில அரசு கோரிய நிதியை, மத்திய அரசு வழங்கவில்லை என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது குறித்து கேட்கிறீா்கள். மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை; முறையாக பயன்படுத்தினால் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கும். தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய அரசின் முப்படைகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. வெள்ளப் பாதிப்புகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாகக் கேட்டு அதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம் என்றாா்