பணி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு.

UGTRB தேர்வு எழுதி தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பணிகளுக்கு ஜூன் 2 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

Update: 2024-05-31 06:59 GMT

பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணியில் 3 ஆயிரத்து 192 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது , இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்றும் இன்றும்  சென்னையில் நடைபெறுகிறது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

அதன்படிதமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பிறத்துறைப் பள்ளிகளில் காலியாக 3 ஆயிரத்து 192 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கு 41 ஆயிரத்து 485 தேர்வர்கள் விண்ணப்பம் செய்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு 130 மையங்களில் பிப்ரவரி 4 ஆம் தேதி நடத்தப்பட்டது. தமிழ் மொழி திறன் அறிவிற்கான 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடத்தில் (தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல்) இருந்து 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு இடம் பெற்றது. போட்டித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 2024 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டன.

தேர்வு எழுதிய தேர்வர்களின் ஒஎம்ஆர் மதிப்பெண்களுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 க்குத் தகுதிபெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்களை (Weightage marks) சேர்த்து மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில், பாடங்களுக்கு 1:1.25 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. கணக்கு மற்றும் புவியியல் பாடங்களுக்கு சேத்துபட்டில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில்  இரு நாட்கள், தாவரவியல் பாடத்திற்கு, விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், விலங்கியல் பாடத்திற்கு சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகின்றன.

சேத்துபட்டில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் 1683 ஆசிரியர்களுக்கும், விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 670 ஆசிரியர்களுக்கும், அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 913 ஆசிரியர்களுக்கும், கீழ்ப்பாக்கம் சி எஸ் ஐ பள்ளியில் 495 ஆசிரியர்களுக்கும் என 3716 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது. இன்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள், இரங்கலை பட்டப்படிப்பு சான்றிதழ், பி எட் பட்டபடிப்பு சான்றிதழ், டெட் தேர்வு இரண்டில் தேர்ச்சி பெற்ற விவரம், நன்னடத்தை சான்றிதழ், உள்ளிட்ட 12 சான்றிதழ்கள் சரி பார்க்கப்படுகின்றன.

Tags:    

Similar News