பட்டுக்கோட்டையில், நோபல் உலக சாதனை நிகழ்த்திய பள்ளிக் குழந்தைகள் 

பட்டுக்கோட்டையில் உலக சாதனை நிகழ்த்திய பள்ளி குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

Update: 2024-03-10 13:30 GMT
திரைப்பட இயக்குனர் சற்குணம் முன்னிலையில், பட்டுக்கோட்டை 'டேலண்ட் ஸ்கூல் ஆப் ஸ்கில்ஸ்'  நடத்தும், 'திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம்' என்ற தலைப்பில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அனைவரையும் பெருமைப்படுத்தும் வகையில் 7 மாணவர்கள் நோபல் உலக சாதனை நிகழ்த்தினர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைச் சேர்த்த வெங்கடேஷ் - ஆஷா தம்பதியரின் 4 வயது மகள் ஜோஷ்மிதா. இவர் 1 நிமிடம் 9 நொடியில் வேகமாக 30 குட்டிக்கரணம் அடித்து நோபல் உலகசாதனை படைத்தார். பட்டுக்கோட்டைச் சேர்த்த சுப்புரத்தினம் - வனிதா தம்பதியரின்   4 வயது மகன் தர்ஷிக், இவர் 14 நிமிடம் 16 வினாடியில், தனது இளம் வயதில் 1 முதல் 50 எண்ணங்களை கொண்ட படம் வரைதல் (அதாவது திண்டுக்கல் பூட்டு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, சேலம் மாம்பழம் படங்கள்), 50 திருக்குறள் மற்றும் 50 விளக்கங்களை சொல்லி உலக Certificates were awarded to school childrenசாதனை படைத்தார். பட்டுக்கோட்டைச் சேர்த்த பாலச்சந்திரன் - மீனாட்சி தம்பதியரின் 5 வயது மகள் சம்ரித்த ஸ்ரீஜா. இவர் 1 நிமிடம் 11வினாடியில் கால அட்டவணையின் 118 கூறுகளை சொல்லி உலக சாதனை படைத்தார். பட்டுக்கோட்டைச் சேர்த்த பழனிவேல்ராஜா - பிரியதர்ஷினி தம்பதியரின் 5 வயது மகன் அக் ஷரன் இவர் 1 நிமிடம் 22 வினாடியில்,  கணிதத்தில் உள்ள சின்னங்கள் மற்றும் சூத்திரங்களைச் சொல்லி உலக சாதனை படைத்தார். பட்டுக்கோட்டைச் சேர்த்த செந்தில்குமார் - நதியா தம்பதியரின் 5 வயது மகள் பிரதிஷ்டா. இவர் 19 நிமிடம் 56 வினாடியில்,  தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் முக்கிய இடங்களின் (அதாவது தஞ்சாவூர் பெரிய கோயில், திருச்சி மலைக்கோட்டை) சிறப்புகளைச் சொல்லி கொண்டே படம் வரைந்து உலக சாதனை படைத்தார். பட்டுக்கோட்டைச் சேர்த்த விஜய்ஆனந்த் - விஜி தம்பதியரின் 5 வயது மகள் சேஷ்மிதா.14 நிமிடம் 14 வினாடியில்,  இவர் 1000 ஆங்கில வார்த்தையை போனிக்ஸ் ஒலியில் சொல்லி உலக சாதனை படைத்தார். பட்டுக்கோட்டைச் சேர்த்த அட்சயக்குமார் - ராதிகா தம்பதியரின் 5 வயது மகன் சாய்மித்ரன். இவர் 2.30 மணிநேரத்தில் வெஸ்டர்ன் நடனத்தில், பல்வேறு பொருட்களை வைத்து நடனம் ஆடி உலக சாதனை படைத்தார். இச்சாதனை நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சற்குணம், பட்டுக்கோட்டை நகர மன்ற தலைவர் சண்முகப்ரியா, ஒன்றியப் பெருந்தலைவர் பழனிவேல், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அன்பழகன், தஞ்சை மருத்துவர் தாமரைச்செல்வி உள்ளிட்டோர், ஏரி பாதுகாவலர் நிமல் ராகவன் கலந்து கொண்டனர்.  இதில், உலக சாதனையை நேரில் ஆய்வு செய்து, பதிவு செய்ய,  நோபல் நிறுவனத்தில் இருந்து வந்திருந்த டாக்டர் அரவிந்த்   முன்னிலையில் சாதனை நிகழ்த்தப்பட்டு, நோபல் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News