வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலைக்கு வாய்ப்பு
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் பென்னாகரம் (தர்மபுரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி) தலா 5, அழகரை எஸ்டேட் (நீலகிரி) 4, தாளவாடி (ஈரோடு), தர்மபுரி PTO (தர்மபுரி), குன்னூர் PTO (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி), ஒகேனக்கல் (தர்மபுரி) தலா 3, குன்னூர் (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), தர்மபுரி (தர்மபுரி), கேத்தி (நீலகிரி), மேட்டூர் (சேலம்), பாலக்கோடு (தர்மபுரி), காட்பாடி (வேலூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), கோடநாடு (நீலகிரி), பாலக்கோடு ARG (தர்மபுரி) தலா 2, பொன்னை அணை (வேலூர்), எமரால்டு (நீலகிரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), ஏற்காடு (சேலம்), வேலூர் (வேலூர்), பர்லியார் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி), அம்முண்டி (வேலூர்), போளூர் (திருவண்ணாமலை), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), சண்முகாநதி (தேனி), ஆனைமடுவு அணை (சேலம்), கோடிவேரி (ஈரோடு), போச்சம்பள்ளி ARG (கிருஷ்ணகிரி) தலா 1 சென்டி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசியது. அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 43.5° செல்சியஸ் (இயல்பை விட +6.7° செல்சியஸ் அதிகம்) மற்றும் ஈரோட்டில் 43.4° செல்சியஸ் (இயல்பை விட +5.3° செல்சியஸ் அதிகம்) பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 43.2° செல்சியஸ், திருச்சியில் 42.1° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.8° செல்சியஸ், திருத்தணியில் 41.4° செல்சியஸ், தர்மபுரியில் 41.2° செல்சியஸ், மதுரையில் (விமான நிலையம்) 41.1° செல்சியஸ், மதுரையில் (நகரம்) 41.0° செல்சியஸ், பாளையம்கோட்டையில் 40.6° செல்சியஸ், நாமக்கல்லில் 40.5° செல்சியஸ், சேலத்தில் 40.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39° – 40° செல்சியஸ், பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36° – 38° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24° –30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 40.1° செல்சியஸ் (+3.0° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.3° செல்சியஸ் (+1.2° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 7 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் 8 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 9 முதல் 11 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 2 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அடுத்த 3 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°–43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39°–40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°–38° செல்சியஸ் இருக்கக்கூடும். காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 45-80% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மே 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.