கமல்ஹாசன் பிரச்சார பயணத்தில் மாற்றம்?
கமல்ஹாசன் பிரச்சார பயணத்தில் மாற்றம் செய்ய மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-29 09:06 GMT
கமல்
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்கிறார்... தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில் கமல்ஹாசன் பிரச்சார சுற்றுப்பயணத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் இடம்பெறாமல் இருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது... காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசினார்... அப்போது காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிக்கும் பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.... இதனால் கமல்ஹாசன் பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்ய மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளது... ஈரோட்டில் திட்டமிட்டபடி இன்று பிரச்சாரத்தை கமல்ஹாசன் தொடங்குவார் என்றும் வரக்கூடிய நாட்களில் பிரசார பயணத்தில் சில மாற்றங்களை செய்து காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் பயணம் திட்டத்தில் மாற்றம் செய்யப்படலாம் என மக்கள் நீதி மய்யம் வட்டார தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.