முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் மாற்றம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் 30 நாட்களிலிருந்து 60 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-03-16 00:52 GMT

பைல் படம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது .பயணிகளின் வசதிக்காக  நேற்று முதல் பயண முன்பதிவு காலம் 30 நாட்களுக்கு பதிலாக 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது .

எனவே தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மேற்கண்ட வசதியை பயன்படுத்தி தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டம்மிட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Tags:    

Similar News