சவுக்கு சங்கர் வழக்கு: சி பி ஐ விசாரணைக்கும் கடிதம்
சவுக்கு சங்கர் வழக்கு தொடர்பாக நீதிபதியை தொடர்பு கொண்ட இரு நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.;
Update: 2024-05-28 02:03 GMT
சவுக்கு சங்கர் வழக்கு தொடர்பாக நீதிபதியை தொடர்பு கொண்ட இரு நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
யூ டியூபர் சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை தொடர்பு கொண்ட இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். நீதிபதி சுவாமிநாதன், அந்த நபர்கள் யார் என்பதை வெளிப்படுத்தாததால், அவர்களை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அணுகியதாகவும், அதனால் தான் சவுக்கு சங்கர் வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக நீதிபதி சுவாமிநாதன் தகவல்.